திருவெண்ணைநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வசிப்பிடத்தை இழந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அந்தப் பகுதிக்கு அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருக்க முடியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தர்ணா போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்தி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.