Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? திருமணமான 9 மாதத்தில்…. பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை காதலித்து 2-வதாக திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வடக்குபேட்டை தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவமுனியப்பன் என்ற மகன் இருக்கிறார். இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இதில் சிவமுனியப்பன் தற்போது பெற்றோருடன் நம்பியூர் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவமுனியப்பனுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சவுமியாக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து கடந்த 12-ஆம் தேதி சிவமுனியப்பன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் சோகத்துடன் இருந்த சவுமியாவிடம், சிவமுனியப்பன் விசாரித்தார். அதற்கு சவுமியா தனது கணவர் சிவமுனியப்பனிடம் கூறியதாவது “எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதனை மறைத்து நான் உங்களை திருமணம் செய்து கொண்டேன்.  இந்த விவரம் உங்களுக்கு தெரியவந்ததால் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களோ என்ற பயத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள விஷத்தை குடித்து விட்டேன்” என்று அவர் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவமுனியப்பன் மனைவி சவுமியாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சவுமியாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே இருப்பதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியும்  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |