Categories
மாநில செய்திகள்

BREAKING : காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடந்த போதிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என்று புவியரசன் தெரிவித்திருந்தார். அதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |