Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… யாருன்னு பாருங்க…!!!

விக்ரம் படத்தில் நடிகர் ஹரீஷ் பெரடி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது கோவையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Hareesh Peradi turns hero- Cinema express

இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் ஹரீஷ் பெரடி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் ஹரீஷ் பெரடி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |