பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மின்சார வாகனஙக்ளுக்கு சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் மின்சார வாகனங்களுக்கு ஜார்ஜ் செய்வதற்கான கட்டண விவரத்தை கேரள அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான நேரத்தில் சார்ஜ் செய்வதற்கு ஒரு யூனிட் 10 ரூபாயும், காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.12ம், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சார்ஜ் செய்வதற்கு ரூ.15 ம் வசூலிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.