விஷால் சரோஜா தேவியை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் விஷால் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”எனிமி”. தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இவர் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவியை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும், அவரின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.