தமிழகம், ஆந்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வட கிழக்கு பருவமழையின் காரணமாக ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவர்ணமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரை ஓரம் கட்டப்பட்டு இருந்த அடுக்குமாடி வீடு சரிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆற்றின் கரையோரம் வீடு கட்டினால் இப்படித்தான் நடக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.