விவேக்கின் நண்பர் செல்முருகன் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது.
இதனையடுத்து, மறைந்த நடிகர் விவேக்கின் பிறந்தநாளான இன்று பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில், விவேக்கின் நெருங்கிய நண்பரான செல்முருகன் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.
Happy birthday sir.. miss u pic.twitter.com/POkvtoz8sP
— Cell Murugan (@cellmurugan) November 18, 2021