மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது கணவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் கோவிந்தம்மாள் அவரது மகள் சாந்தாமணி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோவிந்தம்மாளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிந்தம்மாள் எனக்கு வாழ பிடிக்கவில்லை என அடிக்கடி சொல்லி வந்துள்ளார்.
இந்நிலையில் கோவிந்தம்மாள் தோட்டத்தில் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் கோவிந்தம்மாளை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.