Categories
மாநில செய்திகள்

இந்தி மொழி ஏன் கற்க கூடாது?…. கேள்வி எழுப்பிய மதுரை கோர்ட்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அதில், மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தும்போது இந்தியில் பெயர் வைப்பதாக கூறி இருந்தார். தமிழக அரசின் அரசாணைகள், விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்பில் இந்தியில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுத வேண்டும்.

அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் திட்டங்கள் மற்றும் இனி வரும் நாட்களில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் வேல்முருகன் அமர்வு ஆகியோர்கள் ஏன் இந்தி மொழியை கற்க கூடாது என்று கேள்வி எழுப்பினர். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது.

எனவே மொழியை மொழியாக மட்டும் கையாள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அந்த மனுதாரர் விருப்பப்பட்டால் தமிழ் வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்மொழித் துறை ஆகிய துறைகளிடம் மத்திய அரசின் திட்டங்களை மொழிபெயர்த்து தருமாறு கோரிக்கை வைக்கலாம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், தமிழ் வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்மொழிக்கு துறைகளில் தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கேட்டார். அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கை வருகின்ற 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Categories

Tech |