மின் மயான ஊழியர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கால கவுண்டன்புதூர் பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நகராட்சி மின்மயானத்தில் தங்கியிருந்து எரியூட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ரங்கராஜை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.