ஜெய் பீம் படத்தின் மனதை வருடும் ”தல கோதும்” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ராஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது.
இதனையடுத்து, இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மனதை வருடும் ”தல கோதும்” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.