தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்றும் இன்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்த போதிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.