Categories
மாநில செய்திகள்

வீட்டை விட்டு வெளிய போக முடியாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருந்தாலும் மக்கள் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |