மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று மாறுபட்ட சூழ்நிலை ஏற்படக்கூடும். நிதான செயல் கூடுதல் நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத் தான் இருக்கும். சிக்கனமாக பணச்செலவு செய்வது நல்லது. இன்று தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.
குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை இன்று பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை காலையில் நீங்கள் எழுந்ததும் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக இட்டு பின்பு உங்கள் வேலையை ஆரம்பியுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்