கடகம் ராசி அன்பர்களே..!! இன்று பணி முழு அளவில் வெற்றியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளமைக்கால நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து மட்டும் சொல்லக்கூடும். அவர்களிடம் நீங்கள் எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள். அவர்களை எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் எப்பொழுதுமே உங்களுக்கு நல்லது.
மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானது போலவே இருக்கும். மனதை தளரவிடாமல் படிப்பது மிகவும் சிறப்பு. கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். தாய்வழி உறவினர்களுடன் சஞ்சலங்கள் ஏற்படலாம். கூடுமானவரை பொறுமையாகவே பேசுங்கள். மற்றபடி இன்று தனவரைப் பொருத்தவரை எந்த வித பிரச்சினையும் இல்லை. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.
இன்று மனம் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படும். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்