Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : நியூஸி.யை கட்டுப்படுத்திய இந்திய பவுலர்கள் …. இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா –  நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 153 ரன்கள் குவித்துள்ளது .

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் – டேரில் மிட்செல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் .

இதில் அதிகபட்சமாக மார்ட்டின் ,டேரில் மிட்செல் இருவரும் தலா 31 ரன்னும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்னும் எடுத்தனர் . இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய  ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார் .அடுத்ததாக புவனேஷ்வர் , தீபக் சாஹர் , அக்சார் பட்டேல் மற்றும்  அஸ்வின்ஆகியோர் தலா ஒரு விக்கெட்  கைப்பற்றினர் .தற்போது களமிறங்கியுள்ள இந்திய அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Categories

Tech |