Categories
மாநில செய்திகள்

BIG NEWS: 6 மாவட்டங்களில் நாளை விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதிலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடுகுத்தகை, பாடியநல்லூர், ஆரம்பாக்கம், ராமஞ்சேரி, மதுரா, புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |