Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது…  நடிகர் சூர்யா ட்வீட்…!!!

விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கின்றது என்று நடிகர் சூர்யா டுவிட் செய்துள்ளார். நாட்டு மக்களிடையே இன்று காலை உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இவர் அறிவித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் பலரும் இதனை வரவேற்றுள்ளனர். மேலும் விவசாயிகள் இனிப்புகள் , வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். உழவே தலை என்ற தலைப்பில் நடிகர் சூர்யா ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். “அதில் விவசாயிகளின் அறப் போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |