கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று செயல் நிறைவேற தாமதம் தான் பிடிக்கும். சிறிய பணி கூட அதிக சுமை போல இருக்கும். கடுமையான உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது சிறப்பு. காரியத்தில் தடை தாமதம் அலைச்சல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி நல்லபடியாகவே இருக்கும். பழைய பிரச்சனைகள் இன்று கொஞ்சம் தலைதூக்க கூடும்.
ஆனால் பழைய பிரச்சினைகளுக்கு இன்று நீங்கள் முழுவதும் தீர்வு காண்பீர்கள். எதிர்ப்புக்கள் ஓரளவு சரியாகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கம்மியாக தான் வரும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் மனம் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருக்கும். இன்று அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். அதுபோலவே நண்பர்கள் மூலம் நீங்கள் சில முக்கியமான பணியையும் மேற்கொள்ளக் கூடும்.
இன்று மாலை வேலை நேரங்களில் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழலும் இருக்கும். கூடுமானவரை இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ஆலய வழிபாடு உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாமாக வழங்குங்கள். தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்