Categories
மாநில செய்திகள்

இனி பாடபுத்தகத்தின் முதல் பக்கத்தில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாலியல் புகார்களை மாணவிகள் தெரிவிக்கும்போது மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளியில் பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கபடும். மாணவர்கள் புகார் அளிக்க அறிவிக்கப்பட்ட 14417 உதவி எண் வரும் காலங்களில் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |