அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் 600 கோடி வரை சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அவர் தனது பதவியைப் பயன்படுத்தி 800 கோடி மதிப்பிலான டெண்டரை நண்பர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இவர் மீது கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் தெரிவித்தார். தனதுஅதிகாரத்தைப் பயன்படுத்தி கேபி அன்பழகன் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகார் தொடர்பான ஆவணங்களை திரட்ட கால அவகாசம் தேவை என லஞ்ச ஒழிப்பு போலீஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.