Categories
மாநில செய்திகள்

நவம்பர் 25 முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் சேவை முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், முன் பதிவு செய்யாமல் உடனடி டிக்கெட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை எழுந்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் முக்கியமான ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே துறை மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் ரெயில்கள் விவரம்:

1. சென்னை – காரைக்குடி பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

2. சென்னை – மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

3. சென்டிரல் – கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட்

4. தாம்பரம் – நாகர்கோயில் அந்தோத்யா

5. மதுரை சந்திப்பு- புனலுர் எக்ஸ்பிரஸ்

6. மங்களூர் சென்டிரல்- கோவை

7. திருநெல்வேலி- பாலக்காடு எக்ஸ்பிரஸ்

8. நாகர்கோவில்- மங்களூர் எக்ஸ்பிரஸ்

Categories

Tech |