Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று நள்ளிரவு கரையை கடந்தது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 23 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |