போலந்து நாட்டில் வசித்து வரும் 83 வயதாகும் மூதாட்டியை 28 வயதாகும் இளைஞர் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்பாக பேஸ்புக்கின் மூலம் பழகி நட்புறவு கொண்டு படிப்படியாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளார்.
போலந்து நாட்டில் ப்ரோமோ என்னும் 83 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து போலந்து நாட்டைச் சேர்ந்த 83 வயதாகும் மூதாட்டியும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 28 வயதாகும் இளைஞர் ஒருவரும் பேஸ்புக்கின் மூலம் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்பாக நட்புறவு கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு 6 வருடங்களுக்கு முன்பாக 55 வயது வித்தியாசமுடைய இருவருக்குமிடையே ஏற்பட்ட நட்புறவு படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு அவருடைய பெற்றோர்கள் 18 வயதாகும் சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார்கள். ஆனால் அவர் தான் பேஸ்புக்கின் மூலம் நேசித்த 83 வயதாகும் மூதாட்டியை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்துள்ளார். இதனையடுத்து இருவரும் தற்போது தங்களுக்கான திருமணத்தை செய்துள்ளார்கள்.