சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கை குறித்த புத்தகமானது பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கையை விவரிக்கும் புத்தகம் ஒன்றை அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது ஹிந்தி மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதியானது ‘ஷி ஜின்பிங்: சீனாவின் ஆட்சிமுறை’ என்பதாகும். இது இந்தி,பாஷ்டோ, டாரி,சிங்களம், உஸ்பெக் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சீன தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்ச்சியில் இந்த புத்தகமானது வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது சீன மாண்டரின் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்தது. குறிப்பாக கடந்த 2012ல் இருந்து பல்வேறு நடவடிக்ககைகள் மூலமாக அனைத்து அதிகாரங்களையும் அதிபர் தன்வசப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முறையில் சோசலிசம் என்ற கொள்கையை அக்கட்சியின் முன்னாள் தலைவரும் மாசே துங் மறைவுக்குப் பிறகு அதனை வழிநடத்தியவரான டெங் ஜியோபிங் முன்மொழிந்தார். தற்போது அந்த கொள்கையை சீன அதிபரும் மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.