Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு “அலர்ட்” எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. கரையை கடந்ததும் தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவி வருகிறது.

அதனால் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |