சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி அணைப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சாராயம் விற்பனை செய்ததாக ராமசேஷபுரம் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.