பொழுதுபோக்கிற்காக விண்வெளி வீரர்கள் விளையாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள கோபி பாலைவன பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி விண்கலம் மூலம் விண்ணிற்கு சீன வீரர்கள் அனுப்பப்பட்டனர். இவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அங்கேயே தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். மேலும் விண்வெளியில் உள்ள அவர்கள் பொழுதுபோக்கிற்காக ‘லாட்ஸ்கி’ என்னும் சீன புதிர் விளையாட்டை விளையாடியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா போன்று சீனாவும் விண்ணில் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்து வருகிறது. இதன் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக வீரர் மற்றும் வீராங்கனைகள் அங்கேயே தங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.