Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்.. 4 காவலர்கள் உயிரிழப்பு.!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் லதேஹர் மாவட்டத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது காவல் துறையினர் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

Image result for The death of four policemen in Jharkhand Naxalite gun attack has triggered an uproar.

இதில் உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையினர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் ரகுபர்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |