Categories
தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…. சற்றுமுன் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் இந்த மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சீரானதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. அதனால் பக்தர்கள் இன்று சபரிமலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |