Categories
மாநில செய்திகள்

பேருந்து நிலையத்திற்கு இடம் பார்த்தாச்சு….. 2500 புதிய பேருந்துகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மாவட்டத்தில் எளிதாக செய்யக்கூடிய தாழ்வான பகுதி களான 42 இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கன மழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்காக அனைத்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தற்போது மழை வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. ஆனாலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான போதுமான உரம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று மாவட்டத்திற்கு 1300 டன் அளவில் உரம் வர உள்ளது. இந்த உரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி வருகின்ற நிதியாண்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமில்லாமல் தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 2500 பேருந்துகள் வாங்க முடிவு செய்துள்ளது.அதில் 500 பேருந்துகள் மின்னும் பஸ்களாகும். மேலும் பழுதான பேருந்துகளை   சீரமைப்பதற்காக நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு மூன்று மாதங்களில் பேருந்துகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |