Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. 2 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ சித்தர்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி திடீரென அவரது செல்போன் மற்றும் 300 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரியம்மன் கோவிலை சேர்ந்த நாகராஜ், நாடியாப்பிள்ளை தெருவை சேர்ந்த குருமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் 300 ரூபாய் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

Categories

Tech |