Categories
மாநில செய்திகள்

JUSTIN : மழை வெள்ள பாதிப்பு… அமைச்சர் விளக்கம்…!!!

மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விளக்கம் அளித்து வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்  1.10.2021 முதல் 18.11.2021 வரை தமிழ்நாட்டில் 480.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இது இயல்பான மழையை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும். மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. மழை சேதங்கள் குறித்து மாவட்டங்களில் இருந்து கூடுதல் விவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கை பெறப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |