Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் தேர்வு…. மெரினாவில் மாணவர்கள் போராட்டம்…. கடும் எச்சரிக்கை….!!

சென்னை மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கல்லூரி தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த முடிவை மாணவப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்ட நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று மெரினா கடற்கரையில் சிலர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புகின்றனர். எனவே அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Categories

Tech |