Categories
இந்திய சினிமா சினிமா

சத்ய சாய் ஜெயந்தி விழாவில் ‘பிரேமம் நடிகை’.!!

புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 94ஆம் ஜெயந்தி விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு தரிசனம் மேற்கொண்டார்.

பிரேமம் திரைப்படம் மூலம் மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தீவிர சாய்பாபா பக்தையான இவர் வியாழக்கிழமை தோறும் சாய்பாபா வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.இதனிடையே புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 94ஆம் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் குல்வாந்த் ஆலயத்திற்கு சென்றுள்ள சாய் பல்லவி அங்கு நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.தொடர்ந்து அங்குள்ள சத்ய சாய் அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய சாய் பல்லவியுடன் சில நிர்வாகிகளும், பக்தர்களும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

Categories

Tech |