கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயதான மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் மாணவி கண்ணீருடன் எழுதிவைத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அந்த மாணவி எழுதியுள்ள கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகிற கடைசி பெண்ணாக நான் தான் இருக்க வேண்டும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்பதை சொல்ல பயமாக உள்ளது. இந்த பூமியில் வாழ ஆசைப்பட்டேன். ஆனால் தற்போது பாதியில் போகிறேன். இன்னொரு ஜென்மம் இருந்தால் உலகத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். என் குடும்பத்தினரை நான் மிகவும் மிஸ் பண்ணுவேன். உங்கள் அனைவரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா உங்க கிட்ட சொல்லாம இப்ப போறேன். எந்த பொண்ணும் இனி இந்த மாதிரி சாகக்கூடாது என்று அந்த கடிதத்தில் அவர் உருக்கமாக எழுதி இருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.