Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்த சிறப்பான திட்டம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு சிறப்பு படை அமைக்குமாறு மாநகர காவல் ஆணையர் அங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் சட்டவிரோதமாக அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி குரோம்பேட்டை புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை விசாரித்த நீதிபதி, வணிக நிறுவனங்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த போலீஸார் சிலர் அனுமதிப்பதாகவும், இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விதிகளை மீறும் நிறுவனங்களின் உரிமத்தை உள்ளாட்சி அமைப்புகள் ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |