சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்தில்31 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3,741 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் 2 சதம் மற்றும் 19 அரை சதங்கள் அடங்கும் .இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார் .இதில் இந்திய அணியின் விராட் கோலி 87 டி20 போட்டிகளில் விளையாடி 3,227 ரன்கள் குவித்து முதலிடத்தை இருந்தார். தற்போது இவரது சாதனையை மார்ட்டின் கப்தில் முறியடித்துள்ளார்.