ரஷ்ய அரசு, ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், 3 விமானங்களில் நிவாரண பொருட்களை அனுப்பியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி, அங்கு இடைக்கால ஆட்சி அமைத்தனர். அதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனினும் சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் உணவுத் தட்டுப்பாடும், கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்கள் உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது. எனவே, ரஷ்ய அரசு, மனிதாபிமானத்தின் அடிப்படையில், 36 டன் எடையுடைய நிவாரண பொருட்களை 3 விமானங்களில் அனுப்பியது. இந்த நிவாரண பொருட்கள். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு நேற்று சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.