நடிகர் பாலசரவணன் டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் அயலான், டான் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பாலசரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
#DON DUBBING DONE…Magizhchiiii 🙌🏾🙌🏾🙌🏾@Siva_Kartikeyan @Dir_Cibi @KalaiArasu_ @SKProdOffl @Darshan_Offl @kaaliactor @sivaangi_k @RJVijayOfficial
😍😍😍😍😍 pic.twitter.com/Vhq25uQ7zB— Bala saravanan actor (@Bala_actor) November 19, 2021
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் பாலசரவணன் டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.