Categories
மாநில செய்திகள்

26 நாடுகளுக்கு மனைவியுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் சென்ற பிரபல டீக்கடைக்காரர் மாரடைப்பால் மரணம்….!!

26 நாடுகளுக்கு மனைவியுடன் சுற்றுப்பயணம் செய்து பிரபலமடைந்த கொச்சியை சேர்ந்த டீக்கடைக்காரர் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ் என்ற பெயரில் டீ கடை நடத்தி வருபவர் கே.ஆர்.விஜயன் இவருடைய மனைவி மோகனா. இந்த தம்பதியினர் தங்கள் டீ கடையில் கிடைக்கும் வருமானத்தில் சிறு பகுதியை தினம்தோறும் சேமித்து வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு தொடங்கி கிட்டத்தட்ட 26 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா உதவி செய்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த தம்பதியினர் பிரபலம் அடைந்துள்ளனர். இந்நிலையில் டீக்கடை நடத்தி கடந்த 14 ஆண்டுகளாக சுமார் 26 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பிரபலமடைந்த கே ஆர் விஜயன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி கடைசியாக ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |