இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து டிஜேபிக்கள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்களுக்கு லக்னோவில் காவல்துறை தலைமையகத்தில் 56 வது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இணைய குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த மாநாடு இன்று மற்றும் நாளை நடக்கிறது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் பிரியங்கா காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, உள்துறை இணை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் போராட்டத்தில் இருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். டிஜேபி 56 வது மாநாடில் உள்துறை இணை அமைச்சர் கலந்து கொள்வார்.
எனவே விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை இருந்தால் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை பிரதமருக்கும் கடிதத்தின் மூலம் தெரிவித்து உள்ளேன் என்று அவர் கூறினார்.