Categories
மாநில செய்திகள்

தனித்தனியா கொடுக்க வேணாம்…. மொத்தமா கொடுத்தா சூப்பரா இருக்கும்… அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பரிசு தொகுப்பினை வெளியிட்டுள்ளது.

அதில் பல்வேறு பொருட்களுடன் துணி பையும் இடம்பெற்றுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியாக அனுப்பாமல் அனைத்தையும் ஒரே பையில் போட்டு பாக்கெட் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்புமாறு தமிழக அரசிடம் ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே பரிசு தொகுப்பில் உள்ள பொருள்கள் அனைத்தையும் நுகர்பொருள் வாணிப கழகமே துணிப்பையில் போட்டு அவற்றை யாரும் எடுக்க முடியாத அளவிற்கு தைத்து அரிசி அட்டை குடும்ப தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதே ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கை ஆகும்.

Categories

Tech |