Categories
தேசிய செய்திகள்

JUSTIN : 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்… விவசாயிகள் அமைப்புகள்…!!!

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று குருநாத் ஜெயந்தியையொட்டி காலை தொலைக்காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் பொழுது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் என்றும் கூறியிருந்தார். இதனை விவசாயிகள் வரவேற்றாலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தனர்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்தாலும், ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். வரும் 26ம் தேதி போராட்டத்தில் ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் டெல்லியில் திரள் கூட்டம் நடைபெறும். 29ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெறும். குறைந்த பட்ச ஆதார விலை, மின்சாரம் மசோதா வாபஸ், விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து, போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் வைப்பது போன்ற கோரிக்கைகள் பற்றி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |