Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடியட்டும் பாத்துக்கலாம்…! தற்காலிக வாபஸ் தானா… குண்டை தூக்கிப் போட்ட சித்தராமையா …!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது.

ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து நேற்று  காலை மக்களிடம் பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கூறியது, மோடி தலைமையில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக போராடி வருகின்றனர். தற்போது குருநானக் ஜெயந்தி தினத்தன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது ஒரு வருடமாக போராடி வந்த விவசாயிகளின் தற் காலிக வெற்றியாகும். இவர்களின் போராட்டம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு மறக்க முடியாத நிகழ்வாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்தான் மத்திய அரசு இந்த தேர்தல் முடியட்டும் என்றும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வேளாண் சட்டத்தை தற்காலிகமாக வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது. மேலும் நம் பெருமைக்குரிய விவசாயிகள் அவர்களும் வெற்றி பெற்று, நாட்டையும் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

 

Categories

Tech |