கே.ஜி.எப்-2 படம் ரிலீஸாகும் அதே நாளில் அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வெளியாக உள்ளது.
கன்னட திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
#Xclusiv… AAMIR KHAN: 'LAAL SINGH CHADDHA' GETS A NEW RELEASE DATE… #LaalSinghChaddha – starring Stars #AamirKhan, #KareenaKapoorKhan and #NagaChaitanya – to release in *cinemas* on 14 April 2022 #Baisakhi… Directed by #AdvaitChandan… #NewPoster… pic.twitter.com/aW2QjDjZU7
— taran adarsh (@taran_adarsh) November 20, 2021
இந்நிலையில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா படமும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் நாகசைதன்யா, கரீனா கபூர், மோனா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சல்மான்கான், ஷாருக்கான், கஜோல், கரிஷ்மா கபூர், மாதுரி தீக்சித் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.