திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எந்தவொரு அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திமுக அரசு அம்மா உணவகங்களையும், அம்மா மருந்தகங்களை மூடும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மா உணவகங்களில் உள்ள வேலையாட்களின் எண்ணிக்கையை குறைந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது ” திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை எந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை; மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது. அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126 லிருந்து 131 ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.