நடிகை நதியா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1986-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நதியா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, பிரபு, சிவகுமார், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். திருமணத்துக்கு பின் நீண்ட காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
https://www.instagram.com/reel/CWChk2DDukn/?utm_source=ig_embed&ig_rid=3a98153c-ceb6-4210-9956-14dff4c5eb16
தற்போது இவர் நடித்துள்ள திரிஷ்யம்-2 தெலுங்கு படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. மேலும் நடிகை நதியா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நதியா வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.