தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றன. மேலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நேரடி தேர்வு நடந்தது. தற்போது அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நவம்பர் 25 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் குறித்த விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். முழுமையாக தேர்ச்சி பெறாமல் ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தால், 11 மற்றும் 12 இரு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பழைய திட்டத்தின்படி ஆயிரத்து 200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்களுக்கு நிரந்தர பதிவு எண்ணுடன் ஒருங்கிணைந்து அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.